தமிழில் விஜய்யின் ‘துப்பாக்கி’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அக்ஷரா கவுடா.இந்த படத்தில் இவர் நடித்த காட்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.பின்னர் இவர் அஜீத்தின் ‘ஆரம்பம்‘ படத்தில் நடித்ததன் மூலம் ‘ஸ்டைலிஸ் தமிழச்சி’ என அழைக்கப்பட்டார்.

அதையடுத்து ‘போகன்’ படத்தில் ஜெயம் ரவியுடன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தற்போது தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவில் தன்னுடைய கவர்ச்சி இமேஜை உடைக்க கடினமாக இருப்பதாகவும், மேலும் இயக்குனர்கள் கவர்ச்சியான பாத்திரங்களுக்காக மட்டும் தன்னை அணுகுகிறார்கள் என்றும், தான் இந்த மாதிரியான பாத்திரங்களில் மட்டும் நடிப்பேன் என்று மக்கள் நினைப்பது தனக்கு வருத்தமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“இதனால்தான் ஒரு வருடமாக எந்தப் படத்திலும் நடிக்க ஒத்துக்கொள்ளாமல், நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்துக் கொண்டிருந்தேன். என்னால் நல்ல நாயகியாகவும் நடிக்க இயலும்.

எனவே, அப்படிப்பட்ட படங்களில் நடிக்க இயக்குனர்கள் என்னை அணுகுவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று கூறியிருந்தார் அக்ஷரா கவுடா.

தற்போது அம்மணியின் கைவசம் எந்த படவாய்ப்பும் இல்லாததால் இப்போது மீண்டு கவர்ச்சி அவதாரம் எடுத்துள்ளார் அம்மணி. பட வாய்புக்ககான வேட்டையில் தீவிரமாக இருக்கும் அக்ஷரா கவுடா வெளியிட்ட சில கவர்ச்சி புகைப்படங்கள் இளசுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Loading...