தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் மேல் பாலியல் புகார்கள் கூறி பிரபலமடைந்த நடிகை ஸ்ரீரெட்டி தற்போது திரிஷாவை வம்புக்கு இழுத்துள்ளார்.

தெலுங்கு துணை நடிகை ஸ்ரீ ரெட்டி, படவாய்ப்புகள் தருவதாகக் கூறி தன்னனைப் பயன்படுத்திக் கொண்டு சரியான வாய்ப்பு தருவதில்லை என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு திரையுலகினர் மற்றும் தமிழ் திரையுலகினர் மேல் அடுக்கடுக்காகப் புகார்களை வைத்தார். இதில் ஸ்ரீகாந்த், இயக்குனர் சுந்தர் சி, ராகவா லாரன்ஸ், இயக்குனர் முருகதாஸ் உள்ளிட்டோரும் அடக்கம்.

அதன் பின் தமிழகத்தில் வசித்துவரும் அவர் இப்போது சில பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் சமூக வலைதளங்களில் அவ்வபோது சமூகவலைதளங்களில் சர்ச்சையானக் கருத்துகளை பேசி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் திரிஷாவிடம் வம்பிழுப்பது போல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ஒருப் பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், “த்ரிஷா, குளியல் வீடியோ வெளியான பின்பு தான் அவர் பிரபலமானார். அதே போல் நானும் ஒரு வீடியோ வெளியிட்டால் என்ன?. த்ரிஷாவிடம் ஒன்றுமே இல்லை. ஆனால் நான் மிகவும் ஹாட்’ என சொல்லியுள்ளார்.

பல வருடங்களுக்கு முன்னர் த்ரிஷா இடம்பெற்றிருப்பதாக சொல்லி சமூக வலைதளங்களில் ஒரு குளியல் வீடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. அதில் இருப்பது திரிஷாதான் என்பதே உறுதியாகாத பட்சத்தில் ஸ்ரீரெட்டி இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

Loading...