லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் ஹீரோவாக நடிக்கும் படத்தின் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிவி விளம்பரங்களில் மிகப்பெரிய புரட்சியை செய்வதர் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள். தமிழ்நாட்டில் அவரை தெரியாத ஆட்களே இருக்க முடியாது. தன்னுடைய கடை விளம்பரத்தில் தானே நடித்து, ஹீரோக்களின் வாய்ப்பை தட்டிப்பறித்தார்.

இந்த பக்கம் ஹன்சிகா, அந்த பக்கம் தமன்னா என ஜோடிப் போட்டு டான்ஸ் ஆடி தூள் கிளம்பினார் மனிதர். மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அல்வா துண்டு போல் காட்சியளித்தார்.

அருள் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவதாக கடந்த சில மாதங்களாகவே செய்தி அடிப்பட்டு வருகிறது. ஆனால் அது உண்மையில்லை என அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் அப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களை இயக்குபவர்கள் பிரபல இரட்டை இயக்குனர்கள் ஜேடி, ஜெரி. இவர்கள் தான் அருள் நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார்கள். அதற்காக கடந்த சில மாதங்களாகவே ஸ்கிரிப்ட் எழுதும் வேலையில் அவர்கள் ஈடுபட்டு வருந்திருக்கிறார்கள்.

தற்போது ஸ்கிரிப்ட் வேலைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதாம். விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளார்களாம். படத்தில் பட்ஜெட் ரூ.30 கோடி என கூறப்படுகிறது. முன்னணி கதாநாயகிகளில் ஒருவரை படத்தில் கமிட் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

டிவி விளம்பரங்களிலேயே தெறிக்கவிட்ட சரவணர் படத்தில் என்னவெல்லாம் செய்யப்போகிறாராரோ என்ற எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துள்ளது. மீம்ஸ் கிரியேட்டர்கள் இப்போதே தங்களை தயார்படுத்திக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். இனி சரவணனரின் மீம்ஸ் தான் வாட்ஸ்அப் ஸ்டேட்டசாக மாறப்போகிறது.

Loading...