கிரேஸி மோகனுக்கான திரைக்கதை எழுத்தாளராக 8 வருடங்களாக பணியாற்றியவர் காமெடி நடிகர் சதீஷ். அதன் பிறகு இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் வந்த பொய் சொல்ல போறோம் படத்தில் உதவி வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார்.

ஜெர்ரி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சதீஷ், ஆர்யா நடிப்பில் வந்த மதராசபட்டினம் படத்தின் மூலம் பிரபலமானார்.இந்த நிலையில், சதீஷ் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில், மோதிரம் மாற்றிக்கொள்ளும் விதமாகவும், மற்றொரு புகைப்படத்தில் குடும்பத்தோடு இருக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படங்களைக் கண்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த திருமண நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.

இப்போது தான் மணமகள் யார் என்ற விபரம் தெரிய வந்துள்ளது. ஆம், நடிகர் வைபவ் நடிப்பில் சமீபத்தில் வெளியான சிக்ஸர் படத்தின் இயக்குனர் சாச்சியின் தங்கை தான் சதீஷை திருமணம் செய்துகொள்ளவுள்ள பெண்.

இயக்குனர் சாச்சியின் குடும்பத்தினர் கடந்த சில மாதங்களாக பெண்ணுக்கு வரன் பார்த்து வந்துள்ளனர். இதனை அறிந்த நடிகர் சதீஷ் தனது குடும்பத்தினர் மூலம் சாச்சியின் குடும்பத்தினரை அணுகியுள்ளனர். முதலில் மறுத்த சாச்சியின் குடும்பத்தினர் பிறகு திருமணதிற்கு ஒப்புக்கொண்டிருகிறார்கள்.

Loading...