’விஸ்வாசம்’, ‘நேர்கொண்ட பார்வை’ படங்களின் வெற்றியை தொடர்ந்து அஜித், தனது 60 வது பட வேலைகளில் பிஸியாகிவிட்டார். இப்படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல கவர்ச்சி நடிகைக்கு அஜித் பரிசு ஒன்றை கொடுத்ததாகவும், அதன் மூலம் அந்த நடிகை உற்சாகமடைந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த கவர்ச்சி நடிகை நம்ம நமீதா தான். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தனது கவர்ச்சியால் ரசிகர்களை கிரங்கடித்த நமீதா அஜித் மற்றும் விஜய் இருவருடன் நடித்துவிட்டார். மேலும் பல படங்களில் ஹீரோயினாகவும், கவர்ச்சி நடிகையாகவும் நடித்தவர், தெலுங்கு தயாரிப்பாளரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் நடிக்க ரெடியாக இருக்கும் நமீதா, அதற்காக தன்னை தயார்ப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், ‘பில்லா’ படத்தில் அஜித்துடன் நடிக்கும் போது அவர் நமீதாவுக்கு பரிசு ஒன்று கொடுக்க, அதனால் அவர் ரொம்பவே சந்தோஷமடைந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் நமீதா கூறியிருக்கிறார்.

அதாவது, பில்லா படப்பிடிப்பின் போது நமீதா தனது அண்ணன் குழந்தைகளை படப்பிடிப்புக்கு அழைத்து சென்றாரம். அவர்களைப் பார்த்த அஜித், பெரிய சாக்லெட் பெட்டி ஒன்றை அவர்களிடம் கொடுத்தாராம். இதை எதிர்ப்பார்க்காத நமீதா மற்றும் குழந்தைகள் பெரும் மகிழ்ச்சியடைந்தார்களாம்.

இது குறித்து தற்போதைய பேட்டி ஒன்றில் கூறிய நமீதா, அஜித் சாக்லெட் பெட்டி கொடுத்தது தான் எதிர்ப்பார்க்காத ஒன்று என்பதால், அப்போது அது குழந்தைகளுக்கு மட்டும் இன்றி எனக்கும் பெரிய சந்தோஷத்தை கொடுத்ததாக தெரிவித்திருக்கிறார்.

Loading...