நேற்று நடந்த சைக்கிள் டாஸ்கில் கவின் தோற்றதும் தர்ஷனும் ஷெரினும் கொடுத்த ரியாக்ஷ்ன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரே வாரத்தில் மொத்தமாக முடிவுக்கு வர உள்ளது.

பினாலே டிக்கெட்டிற்கான இறுதி டாஸ்க் நேற்று இரவு நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் ஸ்டாண்ட் போட்டு சைக்கிள் ஓட்டினர். கவின் பாதியிலேயே முடியாமல் விலகி கொண்டார்.

அப்போது ஷெரினும் தர்ஷனும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்து கொண்டு கொஞ்சம் ஆறுதல் அடைந்தது போல தெரிகிறது.

காரணம் ஏற்கனவே ஷெரின் கவினும் லாஸ்லியாவும் கூட்டு சேர்ந்து டாஸ்க் செய்வதாக சண்டையிட்டார். மேலும் தர்ஷனும் ஷெரினிடம் இது பற்றி பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tharshan Sherin Photo

Loading...