அமெரிக்காவை சேர்ந்த 61 வயது பாட்டி தன்னுடைய மகனின் குழந்தையை தன் வயிற்றிலே பெற்றெடுத்துள்ள ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த மேத்யூ ஏலெட் (32) மற்றும் எலியட் டக்ஹெர்டி (29) என்கிற ஓரினசேர்க்கை தம்பதியினர் செயற்கை கருவுறுதல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இரண்டு வருடங்களாக ஒரு நம்பிக்கையான வாடகையை தாயை தேடி அலைந்துள்ளனர். அந்த சமயத்தில் மேத்யூவின் தாய் செசில் (61) குழந்தையை சுமக்க முன்வந்துள்ளார்.

அவருடைய வேடிக்கையான பேச்சை கேட்டு மகன் மேத்யூ சிரித்துள்ளான். பின்னர் மருத்துவமனைக்கு சென்ற மேத்யூ, என்னுடைய அம்மா பைத்தியம் போல பேசுகிறார் என கூறியுள்ளார்.

அதனை கேட்டறிந்த மருத்துவர் அவர் பைத்தியம் போல பேசவில்லை. குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

செசில் குழந்தை பெற்று 30 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. அவருக்கு மாதவிடாய் 10 வருடங்களுக்கு முன்பே நின்று விட்டது. அதோடு இல்லாமல் அவருக்கு இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் இருந்ததால் அனைத்து வகையாக சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

குழந்தை பெற்றுக்கொள்வதற்காக தகுதி செசிலிற்கு இருக்கிறது என்பதை உறுதி செய்த மருத்துவர்கள் மேத்யூவின் விந்தணுக்களை, செசிலின் கருமுட்டையில் செலுத்தினர். முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைத்ததால் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால் அதன் பிறகு தான் செசிலிற்கு வேதனை அதிகரித்துள்ளது. வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைபாடு காரணமாக கடந்த 9 மாதங்கள் பெரும் துயரத்தை தாங்கிக்கொண்டிருந்துள்ளார்.

அறுவைசிகிச்சையின் மூலம் தான் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த வேலையில், திங்கட்கிழமையன்று இயற்கையான முறையில் சுகப்பிரசவம் நடைபெற்றது. இதனை பார்த்து மருத்துவர்களே பெரும் வியப்படைந்துள்ளனர்.

அதேசமயம் அங்கு நின்று கொண்டிருந்த மேத்யூ, எலியட் மற்றும் அவருடைய உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் கண்கலங்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்த குழந்தைக்கு பிறகு இரண்டாவது குழந்தையை நான் சுமக்கிறேன் என எலியட்டின் 26 வயதான சகோதரி. லியா ய்ரிபே கூறியுள்ளார். இதனால் குடும்பத்தினர் இன்னும் உற்சாகமடைந்துள்ளனர்.

Loading...