திருச்சியில் கனவு இல்லத்தை கல்விக் கூடமாக தியாகம் செய்த பூக்கடைக்காரரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் அதே பகுதியில் பூக்கடை வைத்திருக்கிறார். தான் சம்பாதித்த பணத்தை சிறிது சிறிதாக சேமித்து குடிசை மாற்று வாரிய திட்டத்தின் உதவியுடன் 10 லட்சம் ரூபாய் செலவில் புது வீட்டை கட்டினார் தியாகராஜன்.

இந்நிலையில்தான் நொச்சிவயல் புதூரிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டடம் சேதம் அடையவே மாற்றுக்கட்டடம் தேவைப்பட்டது.
அங்கு படிக்கும் மாணவர்களின் கல்வி வீணாகி விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், தான் கட்டிய புது வீட்டை தற்காலிக பள்ளிக் கூடமாக நடத்திக்கொள்ள தியாகராஜன் அனுமதி வழங்கியுள்ளார்.‌
எந்தவொரு வாடகையையும் பெறாமல், மாணவர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு வீட்டை மாணவர்களின் நலனுக்காக தியாகராஜன் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Loading...