சிவகங்கையைச் சேர்ந்த இருளப்பசாமி, சில தினங்களுக்கு முன் ஜீவசமாதி அடைவதாகக் கூறியிருந்த சிவபக்தர் உள்ளிட்ட 7 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர் .

இருளப்பசாமி செப். 13ஆம் தேதி அதிகாலை 12 மணிக்குத் தான் ஜீவசமாதி ஆகப்போவது என்பதே, ஆனால் திட்டமிட்டபடி அது செயல்படவில்லை. இதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

தமிழகத்தில் ஜீவசமாதி அடையபோவதாக பரபரப்பை ஏற்படுத்திய சாமியார் உள்ளிட்ட 7 பேர் மீது போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்காக ஒரு மாதமாக உணவு சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் குடித்து வந்ததாக கூறப்பட்டது.

இருளப்பன் என்ற 80 வயது நபர் ஜோதிடம் பார்ப்பதுடன் அருள்வாக்கு கூறி வந்ததால் அவரை சாமியார் என மக்கள் அழைத்து வந்தனர்.

Image result for இருளப்பன் ஜீவசமாதி

இதனையைடுத்து அன்று இரவு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

இரவு 12 மணிமுதல் காலை 5 மணிவரை காத்திருந்த பக்தர்கள் அவர் ஜீவசமாதி அடையப்போகும் நிகழ்வை காண ஆர்வத்துடன் காத்திருத்தனர்.

அதேபோல் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட உயர் அதிகாரிகளும் இதனைக் காண வந்திருத்தனர்.

தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பக்தர்கள் கூட்டதால் பந்தல் நிரம்பி வழிந்திருந்தது. அவர் ஜீவசமாதி அடைய 10 க்கு 10 அளவில் குழியும் தோண்டப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஜீவசமாதி அடையாமல் மக்களை இறுதிவரை ஏமாற்றினார்.

Image result for இருளப்பன் ஜீவசமாதி

நேரம் முடிந்து விட்டதால், இன்னொரு நாளில் ஜீவசமாதி அடைவதாக இருளப்பன் கூறி சென்றார். இதனால் அங்கு வந்திருந்த அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில், ஜீவசமாதி என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி, உண்டியல் வசூலித்ததாக குற்றம்சாட்டி இருளப்பன், அவரது மகன் கண்ணாயிரம் உள்ளிட்ட 7 பேர் மீது சிவகங்கை காவல்நிலைய போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Loading...