பிக் பாஸ் வீட்டில் சென்ற வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வருகை தந்தது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

அதிலும் நேற்று நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாண்டி மனைவின்யின் தங்கையும் அவரது மாமியாரும் அகம் டிவி வழியே சாண்டியிடம் பேசினார்கள். அப்போது சாண்டி மனைவியின் தங்கை மற்றும் மாமியார் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

பின் முகேனின் தம்பி மற்றும் தந்தை மலேசியாவிலிருந்து முகினுக்கு வீடியோ மூலம் வாழ்த்து கூறியுள்ளார்கள்.

அதை தொடர்ந்து ஷெரினின் சித்தி அகம் டிவி வழியே ஷெரினிடம் பேசி தன் அன்பை பரிமாரிக் கொண்டு ஷெரினுக்கு வாழ்த்து கூறினார்.

அதன் பின் சேரனின் தங்கை மகள் சிந்து அகம் டிவி வழியே தனது மாமாவை பார்த்து அவருக்குக்கு வாழ்த்து கூறினார்.

பின் சேரனின் அத்தை மகன் மற்றும் அவரது மனைவி குழந்தைகள் அனைவரும் ஆஸ்த்திரேலியாவிலிருந்து சேரனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 

Loading...