பிக்பாஸ் நிகழ்ச்சியில் காந்த சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர் நடிகை கஸ்தூரி.

இந்நிலையில், ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்துபவர், பிக்பாஸ் வீட்டிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி ஒன்றும் நிகழவில்லை. கதூரியை காமெடி பீசாக மாற்றிவிட்டனர் சாண்டி குரூப்ஸ்.

இந்நிலையில், பிக்பஸ் வீட்டைவிட்டு வெளியேறிய கஸ்தூரி போட்டியாளர்கள் குறித்தும், நிகழ்ச்சி குறித்தும் தொடர்ந்து ட்விட்டரில் பதிவுகளை மேற்கொண்டு வருகிறார்.

அதில், கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், பெரிய முதலாளி (பிக் பாஸ் ) திருட்டு பயலுகளை திறமைசாலியா காட்டுவாங்க, போராளிகளை புறம்போக்காக கட்டுவாங்க, ஏன், ஆண்டவரை (கமல்) கூட ஆக்கப்போற மாத்துவாங்க. இது மிகப்பெரிய அசிங்கம், இது மிகப்பெரிய விளையாட்டு என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த சில வாரத்திற்கு முன்னர் கஸ்தூரி, சேரன் ரகசிய அறையில் இருந்த போது ஷெரீனை சைட் அடித்தார் என்று மறைமுகமாக ட்வீட் செய்திருந்தார்.
இதனால் தற்போது கஸ்தூரி திருடன் என்று குறிப்பிட்டுள்ளது சேரனையா இல்லை கவினையா, வனிதாவையா என்று புரியவில்லை.

Loading...