பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இதுவரை இல்லாத அளவு சூடுப்பிடித்துள்ளது. நிறைய வித்தியாசங்களும், மாறுதலும் கொண்டு மக்களிடையே அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சி கொண்டு வரும் விளம்பரங்களுக்கும் அளவே இல்லை என்றே கூற வேண்டும்.

இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் முடிவில் கவின், வனிதா, ஷெரின்,சாண்டி, தர்ஷன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.தர்சன் நாமினேட் ஆனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

தர்சனுக்கு எப்போதும் மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது.முதல் நாளிலிருந்து இவர்தான் அதிக வாக்குகள் பெற்று வருகிறார்.எனவே, இந்த வாரம் வனிதா நிழ்ச்சியில் இருந்து வெளியே செல்ல போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, கொஞ்சம் மந்தமாக சென்று கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் என்ட்ரிக்கு பிறகுதான் பரபரப்புடன் இருந்தது.பிறகு நேற்று வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் சீசன் 1 யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். அதிலும் சுஜா, சினேகன் பங்கேற்று கடைசிவரை முட்டிக்கொண்டிருந்த கார் டாஸ்க்கை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள்.டிக்கெட் டூ பினாலே என்று ஆரம்பித்த கடினமான டாஸ்கில் சினேகள் வெற்றி பெற்று கோல்டன் டிக்கெட்டினைப் பெற்று இறுதிப்போட்டிக்கு நேரடியாக தெரிவானார். இவருக்கு கமல் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து இந்த டிக்கெட்டினைக் கொடுத்தார்.

அதே போல் இரண்டாவது சீசனில் ஜனனி நேரடியாக இந்த டாஸ்க் மூலமாக தெரிவானார்.தற்போது இந்த சீசனுக்கு இறுதிப்போட்டிக்கு நேரடியாக தெரிவு செய்வதற்கு டிக்கெட் டூ பினாலே என்ற தலைப்பில் கடுமையான போட்டி இந்த வாரம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் பிரபலம் ஒருவர் உள்ளே நுழைந்து டிக்கட் டூ பினாலேவிற்கான டாஸ்கை போட்டியாளர்களுக்கு அறிமுகம் செய்யவிருக்கிறாராம்.

இந்த பகுதி நாளைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பபடும் என்று எதிர்பார்க்கப்படும் இவ்வேளையில், இதுவரை கஷ்டமான டாஸ்க்கினை சந்திக்காத போட்டியாளர்கள் இனி கடுமையான டாஸ்க்கினை செய்யும் அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுகின்றார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Loading...