பிக்பாஸில் நடந்துக் கொண்டிருக்கிற கவின் லாஸ்லியா காதலைப் பற்றி பேசுவதைவிட்டு விட்டு அதைவிட முக்கியமானது சுபஸ்ரீயின் மரணம் என்று நடிகர் ஆரி கூறியுள்ளார்.

Image result for subhasri

ஒரு பேனர் ஒரு பெண்ணின் உயிரை பறித்து விட்டது. அரசியல்வாதிகளைப் போல சினிமாத்துறை சார்ந்தவர்களும் பேனர் வைக்க மாட்டோம் என்று முடிவெடுக்க வேண்டும்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் தர்பார் படத்திற்கு பேனர் வைக்கக் கூடாது என்று அவர் கூறினால் நன்றாக இருக்கும் என்று நடிகர் ஆரி தெரிவித்துள்ளார்.

எம்.டி.பி.சி அண்டு புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் எம்.டி.சுரேஷ் பாபு தயாரிக்கும் படம் காதல் அம்பு. இப்படத்தை அறிமுக இயக்குனர் பிரவீன் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஸ்ரீனிவாச நாயுடு நாயகனாக நடித்திருத்திருக்கிறார்.

மேலும் பரத், கிரண், ரேஷ்மா, மனீஷ், அஸ்வினி, நேஹா, தேஜு, ஆதிரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

அதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஆரி, ஜூனியர் பாலையா, இயக்குநர் பேரரசு, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட முக்கிய சினிமா பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

நடிகர் ஆரி பேசும்போது, இப்படத்தில் நடித்தவர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என்று அனைவரும் புதுமுகங்கள். இவர்களைப் போல் இன்னும் நிறைய பேர் வரவேண்டும் என்றார்.

Image result for actor aari

கடந்த இரண்டு மூன்று நாட்களாக கவின் லாஸ்லியா காதல் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சேரன் பற்றியே பேசுறாங்க. சேரன் காதலுக்கு எதிரியில்லை. விளையாட்டை விளையாடுங்க.

காதல் இருந்தா வெளியே போய் வச்சிக்கங்க என்றுதான் சொன்னார். பிக்பாஸ் என்பது ஒரு நிகழ்ச்சி அந்நிகழ்ச்சியைப் பற்றியே அனைவரும் பேசுகின்றனர். ஆனால், இந்த விஷயங்களைத் தாண்டி நாம் பேச வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது.

யாருக்கோ வைத்த பேனர் அது காற்றடித்ததில், அவ்வழியாக சென்றுக் கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்து, விபத்துக்குள்ளாக்கி இறந்துவிட்டார்.

இதுபோன்ற சம்பவம் எல்லாம் சினிமாவில்தான் வைப்பார்கள். நிஜத்தில் ஒரு துயர சம்பவம் நடந்திருக்கிறது. இறந்த பின்னர் ஐந்து லட்சம் கொடுத்து பலனில்லை. நீதிபதி கண்டித்தும் பயனில்லை.

இங்கே ஒரு உயிர் போனால் மயிருக்கு சமமாக மதிக்கப்படுகிறது. உயிருக்கு மதிப்பே இல்லை. இதற்கு மாற்றம் வேண்டும் சட்டம் கடுமையாக வேண்டும். முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் வெளிநாடுகளில் போய் சுற்றுப்பயணம் செய்துவிட்டு வந்திருக்கிறீர்கள்.

வெளிநாடுகளில் மக்களின் உயிர்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்கிறாங்க. மக்களை பாதுகாக்க எந்தமாதிரி நடவடிக்கை எடுக்கிறாங்க என்பதை பார்த்து விட்டு வந்து இங்கே செயல்படுத்த வேண்டும். பேனர் வைக்க வேண்டாம் என்று அரசியல்கட்சிகள் முடிவெடுக்க வேண்டும். அதிமுக கட்சியின் தொண்டர்கள் முன் உதாரணமாக இருக்கவேண்டும்.

நல்லது செய்யுங்கள்

உங்களால் முடிந்த நல்லது செய்யுங்கள் என்று அரசியல் வாதிகளுக்கும் கூறியுள்ளார். இந்த விபத்திற்குப் பிறகு தி.மு.கவின் தலைவர் மு.க.ஸ்டாலின் இனிமேல் எங்கள் கட்சி விழாவிற்கு பேனர் வைக்கமாட்டோம் என்று கூறியிருக்கிறார். பேனருக்காக யாரும் ஓட்டு போடுவதில்லை.

செயல்பாடுகளுக்காகத்தான் ஓட்டு போடுகின்றனர். மக்களுக்கு நல்லது செய்யும் எந்த கட்சியாக இருந்தாலும் நான் ஆதரிப்பேன் அவர்களுக்கு ஓட்டுப் போடுவேன்.

அதேபோல், சினிமாத்துறை சார்ந்தவர்களும் பேனர் வைக்க மாட்டோம் என்று முடிவெடுக்க வேண்டும். பேனர் வைப்பதை விட விளம்பரம் செய்வதற்கு வெளிநாடுகள் போல இங்கும் செய்யலாம்.

முதல்வருக்கு வேண்டுகோள்

பேனருக்காக போன உயிர் சுபஸ்ரீதான் என்று கடைசியாக இருக்கவேண்டும். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் தர்பார் படத்திற்கு பேனர் வைக்கக் கூடாது என்று அவர் கூறினால் நன்றாக இருக்கும் என்றார்.

ரஜினி மட்டுமல்ல கமல், விஜய், அஜீத் ஆகியோர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைக்க வேண்டும். பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். மாற்றத்தை நம்மிடம் இருந்து தொடங்குவோம்.

Loading...