கணவனின் தவறான நடத்தையை கண்டுகொள்ளாத மாமியாரால் மனமுடைந்த மருமகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வரும் அதிஷ் பாபுராவ் மெத்ரே (30), பிப்ரவரி 19, 2018 அன்று 23 வயதான ஜோதி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

சில மாதங்கள் கழித்து தான் தன்னுடைய கணவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதை ஜோதி தெரிந்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய மாமியாரிடம் கூறிய போது, அவன் ஆம்பளை, என்ன வேணும்னாலும் செய்வான்.. அதனை நீ கண்டுகொள்ளாதே என அலட்சியமாக பதில் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் அடிக்கடி தொடர, மாமியாரும் ஜோதியை மட்டுமே கண்டித்து வந்ததால் மனமுடைந்த அவர், கோபித்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

நீண்ட நாட்கள் ஆகியும் கூட அவரை அழைத்து வருவதற்கான எந்த முயற்சியையும் மெத்ரே மேற்கொள்ளவில்லை. இதனால் ஜோதியின் குடும்பத்தினரே தாமாக முன்வந்து மெத்ரே-வின் வீட்டாரிடம் பேசி மகளை அழைத்துசெல்லுமாறு கூறியுள்ளார்.

அதன்பிறகு ஜோதியின் வீட்டிற்கு வந்த மெத்ரேவின் பெற்றோர், நான் என்னுடைய மகனை கண்டிக்கிறேன், அவனிடம் இதுகுறித்து பேசுகிறேன் எனக்கூறி ஜோதியை மீண்டும் அழைத்து சென்றுள்ளனர்.

மே மாதம் 20ம் தேதியன்று மீண்டும் தம்பதியினருக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் மெத்ரே, தன்னுடைய மனைவியை கடுமையாக தாக்கியதால் அங்கிருந்து வெளியேறி தன்னுடைய சகோதரன் வீட்டிற்கு ஜோதி சென்றுவிட்டார்.

மீண்டும் ஜோதியிடம் சமாதானம் பேசி அழைத்து சென்ற அவருடைய மாமியார், அதன்பிறகு வீட்டில் வைத்து கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஜோதி தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலிஸார் விரைந்த போது, மனைவியின் சடலத்தை தன்னுடைய மடியில் கிடத்தியபடியே மெத்ரே அமர்ந்திருந்தார்.

அவரை காப்பாற்ற முயற்சித்தும் கூட முடியாமல் போனது என விசாரணைக்கு வந்த போலிஸாரிடம் மெத்ரே கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஜோதியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலிஸார், மெத்ரேவை கைது செய்துள்ளனர்.

Loading...