பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடையும் நிலையில், போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பின்பு பிக்பாஸ் வீடே மாறிவிட்டது என்று கூறலாம். எந்த பிரச்சனையும் இன்றி மகிழ்ச்சியாக உள்ளனர் பிக்பாஸ் போட்டியாளர்கள்.

இந்த நிலையில், கமல் வரும் எபிஷோடில் வனிதா பேசுவதற்கு வாயை திறந்தாலே, அங்கிருக்கும் பிக்பாஸ் ரசிகர்கள் அவரை பேச கூட விடாமல் ஆரவாரம் செய்து கூச்சலிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்நிலையில், சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டில் தலைவரை தேர்ந்தெடுக்க போட்டி நடத்தப்பட்டது. அதில் வனிதா, லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆனால் போட்டியில் வனிதா விட்டுக்கொடுத்துவிட்டு வெளியேறிவிட்டார். தர்ஷனும் அதையே செய்தார். ஏன் அப்படி செய்தீர்கள் என வனிதாவிடம் இன்று கமல் கேட்டார்.

“கேப்டனாக இருந்தால் யாரும் நாமினேட் செய்ய மாட்டார்கள் என்கிற பாதுகாப்பு இருக்கும். ஆனால் மக்களுக்கு என்னை பிடித்திருந்தால் அவர்கள் எனக்கு ஓட்டு போட்டு இருக்கவைப்பார்கள். இல்லையென்றால் இன்னொருவருக்கு இடம் கொடுப்பது தான் நியாயம். அதனால் தான் விட்டுக்கொடுத்தேன்” என வனிதா கூறினார்.

இதற்கு செட்டில் இருந்தவர்களிடம் அதிக கைதட்டல் வந்தது.

Loading...