தமிழ் சினிமாவில் வைபவ், ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் மேயாத மான். இந்த படத்தில் வைபவ்விற்கு தங்கையாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் இந்துஜா.

அதன் பின்னர் ஆர். கே சுரேஷுடன் பில்லா பாண்டி படத்தில் நடித்திருந்த இந்துஜா ஆர்யாவுக்கு ஜோடியாக மகாமுனி படத்திலும் நடித்திருந்தார்.

மேலும் விஜயுடன் இணைந்து பிகில் படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இன்னும் பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று தான் சூப்பர் டூப்பர்.

விரைவில் திரைக்கு வர உள்ள இந்த படத்தில் இந்துஜா ஹீரோவுடன் லிப் லாக் முத்த காட்சி ஒன்றிற்காக பல மணி நேரம் டேக் வாங்கி நடித்திருப்பதாகவும் இந்த முத்த காட்சி சர்ச்சை கிளம்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கூறப்படுகிறது.

இதனால் அப்படி என்ன முத்த காட்சி அது என ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Loading...