பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் உள்ளனர்.

அதில், இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட 5 பேரில் யார் வெளியேறுவார்கள் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இந்த பிக்பாஸ் சீசன் 3 ஆரம்பித்த தினத்திலிருந்து இந்த நாள் வரை கடுமையான டாஸ்க்குகள் எதுவும் வழங்கப்படவில்லை என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அதிகளவில் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், இந்த வாரம் டிக்கெட் டு பினாலே அதாவது இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டாஸ்க் நடைபெற இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுவரை பெரிதாக டாஸ்கை கண்டிராத போட்டியாளர்களுக்கு இந்த டிக்கட் டு பினாலேவிற்கான டாஸ்க் மிகவும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த டாஸ்கில் யார் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Loading...