தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை உறவினர்கள் நிறுத்தியதால் பாதிக்கப்பட்ட பெண்ணை மணக்க மாப்பிள்ளை செய்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரவி என்பவருக்கும், ரோஜா பிரியா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விநாயகர் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் தாலி கட்டும் நேரத்தில் உறவினர்கள் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.

இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்து நிற்க, மாப்பிள்ளை ரவி காவல் நிலையத்துக்கு சென்று புகாரளித்தார்.

இதையடுத்து இருவீட்டாரையும் அழைத்து பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மணப்பெண் ரோஜா சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிந்தே திருமணம் முடிவு செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் உறவினர்கள் திருமணத்தை நிறுத்தியது தெரியவந்தது.

அதேசமயம் பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்று கூறி ரவி தான் அவரை மணக்க விரும்புவதாக கூறினார்.

இதையடுத்து மணமகனுக்கு திருமணத்தில் முழு சம்மதம் இருப்பதால் அவரை யாரும் தொல்லை செய்யக்கூடாது என்று மணமகன் வீட்டாரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். இதையடுத்து ரோஜாவை திருமணம் செய்து கொள்ள போவதாக எழுதி கொடுத்த ரவி அவர் குடும்பத்தாருடன் சென்றுவிட்டார்.

ஒருபெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தனது உறவுகளையே எதிர்த்த ரவியின் செயலுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

Loading...