தமிழகத்தில் மதுரை அருகே, காதலித்து ஏமாற்றியதாகக் கூறி, இளைஞரின் திருமணத்தை கர்ப்பிணிப் பெண் ஒருவர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த முனியாண்டிக்கும், இளம்பெண் ஒருவருக்கும் நேற்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த நிலையில், தாலி கட்டும் நேரத்தில், மதுரை விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண் திடீரென அங்கு வந்து, திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.

முனியாண்டி தன்னை காதலித்து கர்ப்பிணியாக்கி ஏமாற்றியதாக அவர் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார், மணமகளிடமும், ஈஸ்வரியிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

இதனால், திருமணம் நிறுத்தப்பட்டதால், மணப்பெண் வீட்டார், அங்கிருந்து சோகத்துடன் புறப்பட்டு சென்றனர். 37வயதுடைய ஈஸ்வரி என்பவர் மணமகனுக்கு சித்தி உறவு என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...