கணவரை சொத்துக்காக எரித்து கொன்ற மனைவியை போலிசார் கைது செய்யப்பட்டுள்ளார்

நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் பாக்கியராஜ் (68). வெளிநாட்டில் தையல் தொழில் செய்த இவர், பின்னர் சொந்த ஊருக்கு வந்தார்.

இங்கு தனியார் வங்கி ஒன்றில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்த பாக்கியராஜ் தற்போது உடல்நிலை சரியில்லாததால் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இவருடைய மனைவி மரியலீலா (62). இவர்களுக்கு சபரி ஆனந்த் (40), டிக்டோ விக்டர் (35) என்ற 2 மகன்களும், அன்ன ஜூலியட் (43), ஞானசெல்வி பிரகாசி (38) என்ற 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.

சபரி ஆனந்த் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார். டிக்டோ விக்டர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு, 2 வருடங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி விட்டார்.

பாக்கியராஜூக்கு சொந்தமான வீட்டின் மாடியில் சபரி ஆனந்தும், கீழ் வீட்டில் டிக்டோ விக்டரும் குடும்பத்துடன் வசிக்கிறார்கள்.

கருத்து வேறுபாடு காரணமாக பாக்கியராஜூம், அவருடைய மனைவி மரியலீலாவும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இதன் காரணமாக வீட்டின் பின்புறம் மரியலீலா வசித்து வருகிறார். அருகில் தனியாக வசித்து வந்த பாக்கியராஜ், தனது இளைய மகன் டிக்டோ விக்டர் வீட்டில் சாப்பிட்டு வந்தார்.

இந்நிலையில் தனது சொத்துக்களை மகன்களுக்கு பிரித்துக் கொடுக்க பாக்கியராஜ் முடிவு செய்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த்த மனைவி மரியலீலா, சொத்துக்களை தனது பெயரில் எழுதி வைக்குமாறு அவரிடம் தகராறு செய்துள்ளார்.

ஆனாலும் பாக்கியராஜ் அதனை பொருட்படுத்தவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் பாக்கியராஜ் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மரியலீலா, கணவர் மீதுள்ள ஆத்திரத்தில் அவர் மீது மண்எண்ணெய் ஊற்றி உயிரோடு எரித்ததாக கூறப்படுகிறது.

இதில் தீ உடல் முழுவதும் பற்றி எரிந்ததால் பாக்கியராஜ் அலறினார்.

பின்னர் சத்தம் கேட்டு ஓடி வந்த மகன்கள் தந்தையை பார்த்து அதிர்ச்சியடைந்து தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பாக்கியராஜ் உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலிசார்மரியலீலாவை கைது செய்தனர்.

Loading...