தயாரிப்பாளரிடம் ரூ.1.20 கோடி மோசடி செய்ததாக பிரபல நடிகர் பிரசாந்த் நாராயணன், மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல இந்தி நடிகர் பிரசாந்த் நாராயண் (50). ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் ’நெடுஞ்சாலை’ படத்தில் போலீஸ் அதிகாரியாக வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். அடுத்து பன்னீர் செல்வம் இயக்கிய ’நான்தான் சிவா’  படத்தில் நடித்திருந்தார்.

அந்தப் படம் வெளியாகவில்லை. இவர், கடந்த 2017-ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த தாமஸ் பணிக்கர் தயாரிப்பில் உருவான மலையாளப் படத்தில் நடித்திருந்தார்.

அப்போது, மும்பையில் தனது மாமனார் நடத்தும் நிறுவனத்தில் முதலீடு செய்தால், அந்த நிறுவனத்தின் இயக்குனராக ஆக்குவதாக கூறினாராம் பிரசாந்த் நாராயணன். இதையடுத்து பணிக்கரிடம் இருந்து அவரும் அவர் மனைவி சோனாவும் ரூ.1 கோடியே 20 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி தாமஸ் பணிக்கர் கேரள போலீசில் புகார் செய்தார். கேரள போலீசார் பிரசாந்த் நாராயண், சோனா இருவரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை வரும் 20-ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

Loading...