பிக்பாஸ் சீசன் 3 தொடங்கப்பட்டு தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் சென்ற வாரம் சேரன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு ரகசிய அறையில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, மதுமிதா பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சித்ததாக கூறி வெளியேற்றப்பட்டார்.

அதாவது, அவர் பிக்பாஸ் வீட்டில் காவேரி பிரச்சனை குறித்து அரசியல் பேசியதாகவும், இதை அங்கிருக்கும் போட்டியாளர்களில் சேரன், கஸ்தூரியை தவிர மற்ற அனைவரும் பயங்கரமாக கிண்டல் செய்து விளையாடியதாகவும், இதனால் தான் மதுமிதா கையை அறுத்துக் கொண்டதாக மதுமிதா கூறியுள்ளார்.

இந்நிலையில், அவர் தன் கையில் ,போடப்பட்டிருந்த கட்டை அவிழ்த்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த, புகைப்படத்தில் அவர் மிகவும் கோரமாக தனது கையை வெட்டிக்கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அவர், தன்னை காயப்படுத்திக் கொண்டு இன்றுடன் 25 நாட்கள் ஆகியுள்ளது. இருப்பினும் அந்த காயங்களைப் பார்க்கும் பொழுது கையை வெட்டிக்கொண்ட சமயத்தில் மிகவும் அவதிப்பட்டுள்ளார் என்றே தெரியவருகிறது.

Loading...