பிக்பாஸ் நிகழ்ச்சியில் உடனே காதலை சொல்லுமாறு லாஸ்லியாவை வலியுறுத்திய கவினுக்கு சேரன் கடிதம் எழுதியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினும் லாஸ்லியாவும் காதலித்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் இது கவினுக்கு இரண்டாவது காதல்.

இந்த விஷயம் ஊரறிந்தது. ஆனால் அவர்கள் எல்லை மீறக்கூடாது, அந்த விஷயம் குறித்து வெளியே போய் பேசிக்கொள்ளலாம், அதுவரை கேமில் கவனம் செலுத்துங்கள் என்று கூறினார் சேரன்.

கவனித்த சேரன்

அவர்கள் மைக்கில் பேட்டரியை ரிமூவ் செய்துவிட்டு பேசியபோதே நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன் எச்சரித்தார். அப்படி யாருக்கும் தெரியக்கூடாத விஷயம் என்றால் வெளியில் போய் பேசிக்கொள்ளுங்கள் என்றார்.

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் தன்னை காதலிப்பதை உறுதியாக சொல்ல வேண்டும் என லாஸ்லியாவை வற்புறுத்தினார் கவின். ஆனால் லாஸ்லியா இங்கு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் வெளியே போய் பார்த்துக்கொள்ளலாம் என கூறினார்.

ஆனால் விடாத கவின், நான் சொல்விட்டேன் என்னுடைய பாஸ்ட் லவ்வை பற்றி நீயும் சொல் என்று தொடர்ந்து வற்புறுத்தினார். இதனை சீக்ரெட் ரூமில் இருந்து கவனித்த சேரன், வெளியே போய் பேசிக்கொள்ளலாம் என்று கூறியும், கவின் வற்புறுத்துவது, நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்காகதான் என்று காஷன் கொடுத்தார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது புரமோவில் இயக்குநர் சேரன் கவினுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், வணக்கம் தம்பி, அவ்வளவு தூரம் பேசிவிட்டு வந்தேன், இருவருமே தங்கள் விருப்பங்களை வெளியில் வந்து பேசிக்கொள்ளலாம், இருவரும் விளையாட்டில் கவனம் செலுத்துங்கள் என்று.

வற்புறுத்திய கவின்

அப்படி இருந்தும் லாஸ்லியாவை இங்கேயே காதலை சொல்ல சொல்வது நியாயமா? அதை வலியுறுத்தலாமா? செலிபிரேட் பண்ணலாம் என்று நீங்கள் அவரை திங் பண்ணுவது ரொம்ப தவறாக தோன்றுகிறது. ஸ்டாப் பண்ணுவீங்களா? இவ்வாறு அந்த கடிதத்தில் கேட்கிறார் சேரன்.

தர்ஷன் அந்த கடிதத்தை வாசிக்க வாசிக்க கவினின் முகத்தில் ஈயாடவில்லை. லாஸ்லியாவும் குனிந்த தலை நிமிரவில்லை. இப்படியாக உள்ள மூன்றாவது புரமோ.

சேரனின் கடிதத்தை கவினும் லாஸ்லியாவும் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்கள். அதற்கு எப்படி ரியாக்ட் செய்யப் போகிறார்கள் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.

நியாயமா கவின்?

 

Loading...