பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக கூறி பிக்பாஸ் வீட்டைவிட்டு அதிரடியாக வெளியேற்றப்பட்டவர் நடிகை மதுமிதா. இவர் தற்போது தான் எதனால் கையை அறுத்துக்கொண்டேன் என்பதை சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்று முதல் முறையாக பேசிய மதுமிதா.

இவர் மீது பணம் கேட்டு தற்கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தது.

மதுமிதா செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் பொய் புகார் கொடுத்துள்ளதாக கூறியிருந்தார். மற்றும் விஜய் தொலைக்காட்சி தன்னை நேர்காணல் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவிக்கிறது என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது மதுமிதா பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்ததை நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறியது, வாட்ஸ் அப்பில் வைக்கின்ற ஸ்டேட்டஸ் போல் உங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்துங்கள் அதை ‘ஹலோ எப்.எம்மில்’ பதிவிடப்போகிறோம் சொல்ல போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய கருத்தை பகிர்ந்தனர். அப்போது நானும் ”வருணபகவான் கர்நாடகத்தைச் சேர்ந்தவரோ, தமிழகத்திற்கு மழை கொடுக்க மறுக்கிறார்” என்று என்னுடைய கருத்தை பகிர்ந்தேன்.

ஆனால், நான் அப்படி கூறியது தவறு எங்கு இருக்கிறது, அரசியல் இல்லை, ஆனால் அதை முற்றிலும் அரசியல் ஆக்கிவிட்டனர். குறிப்பாக என்று அங்கிருந்த போட்டியாளர்கள் சேரன், கஸ்தூரி இவர்கள் இருவரை தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவருமே இதை அரசியல் ஆக்கிவிட்டனர்.

இதையடுத்து, பிக்பாஸிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது.. அரசியக்ல் குறித்து பேசாதீர்கள், சேனலின் நலன் கருதி தாங்கள் கூறியதை ஓளிபரப்பமாட்டோம் என்று கூறியிருந்தனர்.

இதனால், தான் நான் கையை அறுத்துக்கொள்ள நேர்ந்தது என்று கூறி கண்கலங்கினார். பின்னர், நான் கையை அறுத்து அவர்கள் முன்பு நிற்கிறேன், அனைவரும் தன்னை சீன் போடுவதாக கூறி நகைத்தனர். சேரன் ட்சாரும், கஸ்தூரி மேடம் மட்டுமே ஓடிவந்து கையை பார்த்து முதலுதவி செய்து உதவினர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கமல் சார் இதுகுறித்து பேசாதது தான் தனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர் கண்டிப்பாக இதுகுறித்து கேட்பார், அவர்களை தண்டிப்பார் என்று மிகவும் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை என்று கூறி வருத்தப்பட்டுள்ளார் மதுமிதா.

Loading...