பிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்கள் முடிந்த நிலையில், இறுதிகட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான முதலே காதல் என்ற ஒரு பிரச்சனை இந்த சீசனின் பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது.

இதற்கிடையில் சேரன், லாஸ்லியா அப்பா மகளாக பழகி வந்தனர்.

இந்நிலையில், கவின் மீது காதல் கொண்ட லாஸ்லியா சேரனை ஒதுக்க ஆரம்பித்தார். அதுமட்டுமல்லாது, கவின், சாண்டி சேரனை திட்டும் போதெல்லாம் அவர்களுடனே சிரித்து விளையாடிக்கொண்டிருந்தார்.

இதனால், லாஸ்லியா மிது மக்களுக்கு வெறுப்பு உண்டாக ஆரம்பித்தது. சென்ற வாரம் நேயர்கள் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கும் பொழுது கூட லோஸ்லியாவிடம் சேரனை கவின், சாண்டி திட்டுனார்களே, அப்பொழுது ஏன் அமைதியாகவும், அவர்களுடன் சிரித்துக்கொண்டும் இருந்தீர்களே, இது அப்பா மீது கொண்ட பாசமா என கேள்வி கேட்டு லாஸ்லியாவை கதிகலங்க வைத்தனர்.

இதையடுத்து, லாஸ்லியா சேரனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் பாசமுடன் பேச ஆரம்பித்தார். இந்நிலையில், இந்த வாரம் சேரன் எலிமனேட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

சேரன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் போது, லாஸ்லியா கதறி அழுதுள்ளார். மேலும் நீங்க போகக்கூடாது, நீங்க இங்க தான் இருக்கனும், நான் தான் போகனும் என்ரூ தேம்பி தேம்பி அழுதுள்ளார்.

Loading...