சினிமாவுக்கு நிகராக தொலைக்காட்சி சீரியல்களும் தற்போது மக்களிடம் வரவேற்பு பெறுவது போல டிவி நகர்களும் மக்களிடம் பிரபலமாக இருப்பதோடு, சிலர் வெள்ளித்திரையில் நுழைந்து பெரிய அளவில் வெற்றியும் பெறுகிறார்கள். அந்த வகையில், சீரியலில் பிரபலமாக இருந்த நடிகர் ஒருவர் வெள்ளித்திரையில் நுழைந்து வெற்றி பெற நினைத்தவர், தற்போது தனது வாழ்க்கையை தொலைத்து தடுமாறிக் கொண்டிருக்கிறாராம்.

அவர் வேறு யாருமல்ல, ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் இர்பான் தான். கனா காணும் காலங்கள் சீரியலை தொடர்ந்து ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர், திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகி சினிமா பக்கம் தாவினார். ’பள்ளி பருவங்கள்’, ‘சுண்டாட்டம்’, உள்ளிட்ட சில படங்களில் நடித்தவருக்கு சினிமா தொடர்ந்து கைகொடுக்காமல், அவர் நினைத்த இடத்தை பிடிக்க முடியாமல் ரொம்பவே கஷ்ட்டப்பட்டிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் தனது சொந்த செலவுக்கே பணம் இல்லாமல் தடுமாறிய இர்பான், ஓட்டல் ஒன்றில் சர்வராக பணியாற்றியிருக்கிறார். முகத்தை மறைத்துக் கொண்டு ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்தவரை, கஷ்ட்டமர் ஒருவர் பார்த்து அடையாளம் தெரிந்துக் கொள்ள, அங்கிருந்து அழுதுக்கொண்டே ஓடி வந்துவிட்டாராம்.

தற்போதும் நடிக்க இர்பானுக்கு பல வாய்ப்புகள் வந்தாலும் அவற்றை தவிர்த்து வருகிறாராம். அதற்கு காரணம், சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது தான் அவரது லட்சியமாம். அதற்கான படிப்பை முடித்துவிட்டு சில குறும்படங்களை இயக்கியவர், யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், வாய்ப்பு தேட அவருக்கு கிடைத்தது நடிகருக்கான வாய்ப்பாம், சரி அதில் கொஞ்சநாள் டிராவல் பண்ணலாம் என்று நினைத்தவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க, இயக்குநர் கனவை நிறுத்தி வைத்துவிட்டு, ஹீரோவாக நினைத்தவருக்கு அங்கேயும் பெருத்த ஏமாற்றம் மிஞ்சியதோடு, சீரியலில் கிடைத்த வரவேற்பு கூட அவருக்கு சினிமாவில் கிடைக்கவில்லையாம்.

இதனால், இனி இயக்குநராவதே ஒரே லட்சியம் என்று பயணிக்கும் இர்பான், தற்போது 6 திரைக்கதைகளை முடித்துவிட்டு தயாரிப்பாளருக்காக காத்திருக்கிறாராம். அதற்கு முன்பு, வெப்சீரிஸ் ஒன்றை இயக்க இருக்கிறாராம்.

Loading...