பிக்பாஸ் வீட்டில் இன்று மிகப் பெரிய பிரச்சனையாக இருந்ததே, சாண்டி, கவீனை நாமினேட் செய்தது தான், நண்பனையே நாமினேட் செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியால் அழுதார்.

இதனால் வனிதா இது ஒன்றும் அனுதாப கேம் கிடையாது என்று கூறினார். இந்த பிரச்சனை தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்த லாஸ்லியா, வனிதாவிடம் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று கூறினார்.

அப்போது சரி கவீன் அனுதாபத்தை சம்பாதீக்கிறான் என்றால், நேற்று கமல் சார் எபிசோடின் போது நான் தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவேன், வெளியேறுவன் என்று கூறினீர்கள், அது ஏன்? அப்போது கூட ரெம்ப செண்டிமேண்ட்டாக சில விஷயங்கள் செய்தீர்களே அது ஏன் என்றெல்லாம் கேட்டார்,.

அதற்கு வனிதா நானா? அதுக்கு பேர் அனுதாபாமா? நான் எப்படிப்பட்ட பெண் என்று தெரியும் என்று மலுப்பல் பதிலை கூறிவிட்டு, லாஸ்லியா கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் சென்றார்.

Loading...