பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் டாஸ்க்கின் போது, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட டாஸ்க்கில் நான் தான் மிகவும் பிரபலமானவள் என்று கூற வேண்டும், அதன் படி ஒவ்வொருவரையும் வரிசைப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன் படி வனிதா, கவீனுக்கு 5-வது இடத்தையும், முகின் 7-வது இடத்தையும், தர்ஷன் 8-வது இடத்தையும் கொடுத்தனர்.

இதனால் கமல் இன்றைய எபிசோடில் இது குறித்து கவீனிடம் கேட்டார். அப்போது, கவீன் இதை நான் ஏற்றுக் கொள்கிறேன் சார், நான் வீட்டிற்குள் வரும் போது, நான் தான் அதிகம் கஷ்டப்பட்டிருக்கிறேன் என்று நினைத்து வந்தேன்.

ஆனால் வீட்டின் உள்ளே வந்த பின்பு, லாஸ்லியா, தர்ஷன், முகின் கதையை எல்லாம் கேட்டால், நான் எல்லாம் என்ன. நான், சாண்டி அண்ணா எல்லாரும் இங்கே இருக்கோம், ஏதோ டிவியில் வந்துவிட்டோம், இவர்கள் ஜெயித்தால், ஒரு நாடே திரும்பி பார்க்கும்.

அதை விட்டுவிட்டு, 71-ஆம் நாள் நான் தான் பிக்பாஸ் வின்னர் என்று கூறினால் என் மன்சாட்சியே உனக்கு வெட்கமே இல்லையாடா? என்று கேட்கும் சார் என்று கூற, அரங்கத்தில் கைதட்டல் பறந்தது.

அப்போது கமல் இந்த நேர்மை உங்களை உயர்த்தலாம் கவீன் என்று கூறினார்.

Loading...