பிக்பாஸ் வீட்டில் இப்போது காதலர்களாக இருப்பது கவீன்-லாஸ்லியா தான், இவர்கள் இருவரும் காதலித்து வருகின்றனர் என்பது தெளிவாக தெரிகிறது.

ஆனால் இருவரும் இதுவரை அதை வெளிப்படையாக கூறவில்லை.

இந்நிலையில் இன்றைய எபிசோடில் கவீன்-லாஸ்லியா நள்ளிரவில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கவீன், அங்கிருந்த சாண்டியிடம், நான் இவளிடம் சொல்லிட்டேன் அண்ணா, 70 நாள் ஆகியிருச்சு, இனி வெளியே போய் பேசிக் கொள்ளலாம் என்று சொன்னா? அவ மூஞ்சியை தூக்கி வச்சுக்கிறா என்று சொன்னார்.

உடனே சாண்டியும், அவன் சொல்வது தான் சரி, ஒரு தந்தையாக இருக்கும் நான் ஒரு மகளைப் பற்றி என்ன நினைப்பேன், அதே போன்று தான் உன் அப்பா, அம்மா என்ன நினைப்பாரகள் என்று தெரியவில்லை.

அதனால் இந்த 30 நாட்கள் சாதரணமாக ஹாய், பாய் என்று இரு, வெளியே சென்று பார்த்து கொள்ளலாம், உங்க அம்மா, அப்பாவுக்கு நீ சென்று கிளியர் பண்ணு பார்த்துகிறலாம் என்று கூறினார்.

உண்மையிலே சாண்டி ஒரு தந்தை எப்படி நினைப்பார் என்பதை தத்ரூபாமாக நடித்து காட்டினார்.

Loading...