பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படம் நாளை ரிலீஸ் ஆகிற நிலையில் பேனர் கட்டிய ரசிகருக்கு ஏற்பட்ட சம்பவத்தின் வீடியோ ஒன்று அங்குள்ள அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

நாளை பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படம் ரிலீஸ் ஆகிறது என்பதால் ரசிகர்கள் அதை கொண்டாட காத்திருக்கின்றனர்.

தியேட்டர்களில் கட்அவுட், பேனர் என அலங்கரித்து வருகின்றனர். ரசிகர்கள் கொண்டாட இரவு 1 மணிக்கே காட்சி போடலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் பிரபாஸின் ரசிகர் ஒருவர் தெலுங்கானா மெஹபூப் நகரில் உள்ள திருமலா தியேட்டரில் பேனர் காட்டியுள்ளார். அப்போது அவர் மின்சாரம் தாக்கியதில் அந்த இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.

Loading...