தளபதி விஜய்க்கு அவரது தாய் எழுதிய கடிதம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் – அட்லி கூட்டணி அமைந்துள்ளது.

விஜய்-ன் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு பிகில் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம், தீபாவளிக்கு வெளிவர விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் பிகில் படக்குழுவினர் அனைவருக்கும் தளபதி விஜய் தங்க மோதிரம் பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, தளபதி விஜய்க்கு அவரது தாய் ஷோபனா எழுதியுள்ள கடிதம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.