பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கவின் தனது காதல் பற்றி லாஸ்லியாவிடம் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்கு சென்றவுடனேயே காதல் மன்னனாக மாறியவர் கவின். அபிராமி, சாக்‌ஷி என வலம் வந்தவர் கடைசியாக லாஸ்லியா பக்கம் சென்றார்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் சாண்டிக்கு அடுத்து லாஸ்லியாவிடம் அவர் நெருக்கமாக பேசி வருகிறார். கவின் மீது காதல் இருப்பது போலவே லாஸ்லியாவும் நடந்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது ஒரு புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், தனக்கு ஒரு காதல் இருந்ததாகவும், பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பு அது பிரேக் அப் ஆகிவிட்டதாகவும் லாஸ்லியாவிடம் கவின் கூறும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது.