நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்ச்சி பாதி முடிவடைந்தநிலையில், அதன் பாதியிலிருந்து துவங்கியது. அதில் நேற்றைய தினத்தில் சேரன், லாஸ்லியா, வனிதா ஆகியோர் இந்த போட்டியின் டைட்டில் வின்னராக வர தங்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் பற்றிக் கூறினார்கள்.

சேரன் பேசிய போது, பிக் பாஸ் நிகழ்ச்சியானது யூடியூப்பில் வெளிவரும் ஒரு சாதாரண நிகழ்ச்சி போன்றதல்ல, ஒட்டுமொத்தக் குடும்பமும் உட்கார்ந்து பார்க்கும் ஒரு நிகழ்ச்சி ஆகும்.

விட்டுக்கொடுக்கும் பண்பு, சகிப்புத் தன்மை ஆகியவை நிச்சயம் என்னை பிக் பாஸ் 3 டைட்டிலை ஜெயிக்க வைக்கும். பிக் பாஸ் வீட்டில் அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து வருகிறேன்.

ஒவ்வொருவரது குணமும், அனுபவமும் வேறு மாதிரியாக இருக்கும், அதன்படியே நான் நடந்து கொள்கிறேன். மீரா மிதுன் விஷயத்தில் நான் என்ன சொன்னாலும் அவர் காது கொடுத்து கேட்கக் கூடியவர் அல்ல.

அதே போன்று தான் சரவணன் விஷயத்திலும். இவர்களது விஷயத்தில் நான் பேசவில்லை. பேசினாலும் எந்த பலனும், பயனும் இல்லை.

வந்தநாளிலிருந்தே நான் இயக்குனர் என்ற எண்ணத்தில் பழகவில்லை என்றும், ஆனால் கவின், சாண்டி ஆகியோர் என்னை ஒருபோதும் மனிதனாக்கூட நினைத்ததில்லை.

சிரிக்கக் கூட காசு கேட்பது போன்று நடந்து கொள்வார்கள். இதனால் நான் மனதளவில் காயமுற்றேன்” என்று உணர்வுபொங்கக் கூறினார்.