பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் கவின் லோஸ்லியா எப்படி ரொமான்ஸ் செய்தார்களோ, அதவிட அதிகமாகவே கடந்த இருவாரங்களாக ரொமான்ஸ் செய்து வருகின்றனர்.

மேலும், இரவு நேரத்தில் கவினும், லோஸ்லியாவும் மைக்கை ஆஃப் செய்து வைத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தனர். இதை சாண்டி கூட கண்டித்தார். ஆனால், இவர்கள் இருவரும் யார் பேச்சையும் கேட்காமல் அப்படியே செய்துவந்தனர்.

அதே போல பகல் முழுவதும் ஒன்றாகவே இருக்கும் இவர்கள் இரவானால் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டும் இருக்கின்றனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் இருவு நேரத்தில் தனியாக மைக்கை கழட்டி பேசிய விஷத்தை கமல் விளக்கப்படம் போட்டு காண்பித்திருத்தர்.

ஆனால், அவர்கள் இருவரும் என்ன பேசி இருப்பார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் கவினை வைத்து ‘நட்புன்னா என்ன தெரியுமா’ என்ற படத்தை தயாரித்த ரவீந்தர் பிக்பாஸ் குறித்து பேட்டி கொடுத்தார்.

அப்போது இந்த விஷயம் குறித்து பேசிய அவர், இருவரும் சேரனை பற்றி பேசியிருக்கலாம், இல்லையெனில் இருவருக்கும் இடையே தனிப்பட்ட விஷயங்களை பற்றி பேசியிருப்பார்கள் என்று கூறியுள்ளார்.