1993 ஆம் ஆண்டு வெளிவந்து அதிகளவில் பேசப்பட்ட படம் நடிகர் கார்த்தி நடித்த பொன்னுமணி. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயாகியாக ஆர் வி உதயகுமார் தான் நடிகை சௌந்தர்யாவை அறிமுகப்படுத்தினார்..

இவர், 90 களில் இளைஞர்களின் கனவுகன்னியாக வலம் வந்தார்.இதைத் தொடர்ந்து, கடந்த 2004 ஆம் ஆண்டு ஹெலிகாப்டரில் பயணம் செய்துகொண்டிருக்கும் போது ஹெலிகாப்டர் வெடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், நடிகை சௌந்தர்யா குறித்து இயக்குநர் ஆர் வி உதயகுமார் ரகசியம் ஒன்றை சொல்லியுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, என்னுடைய பொன்னுமனிப் படத்தில் அவரை அறிமுகப்படுத்தினேன். அடுத்ததாக சிரஞ்சீவி படத்திற்கும் அவரை நான் சிபாரிசு செய்தேன். அதனால் என்மேல் பாசமாக எப்போதும் என்னை அண்ணா என்று அழைப்பார். ஒரு நாள் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தான் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். பின்னர்தான் அவர் பாஜகவுக்கு பிரச்சாரம் செய்ய சென்றபோது விபத்துக்குள்ளானார். அதைத் தொலைக்காட்சியில் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். அவரது இறுதி மரியாதை நிகழ்ச்சிக்கு சென்ற போது அவர் புதிதாக கட்டியிருந்த வீட்டில் என் புகைப்படத்தை பார்த்து அடக்கமுடியாமல் அழுதேன்.’ எனக் கூறி மேடையிலேயே கண்கலங்கினார்.