பிக்பாஸில் இனி இதற்கு இடம் கொடுக்கமாட்டேன்… சேரனின் கேள்விக்கு சரியா பதிலளித்த லாஸ்லியா

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் நான் தான் டைட்டில் வின்னருக்கு தகுதியானவன் என்று பேசி வருகின்றனர்.

அந்த வகையில் லாஸ்லியா பேசிய போது, நான் இத்தனை நாட்கள் இருக்க முக்கிய காரணம் ரசிகர்கள் தான், அவர்களுக்காக நான் எப்போதும் நேர்மையாக இருப்பேன்.

எங்கோ இருந்த என்னை அவர்களுக்கு தெரியாது? ஆனால் அவர்கள் என்னை நம்பி ஓட்டு போடுகின்றனர். இதனால் நான் எப்போதும் என்னுடைய கேரக்டரை மாற்றமாட்டேன்.

இதற்கு முன்பு நான் எமோஷ்னல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தேன், ஆனால் இனிமேல் எமோஷனுக்கு இடமில்லை, இனி வெற்றியை நோக்கி பயனிப்பேன்.

அப்போது சேரன் இடையில் குறுக்கிட்டு நீங்கள் என்னை நாமினேட் செய்யவே மாட்டேன் என்று கூறினீர்கள், ஆனால் அடுத்த நாள் என்னை நாமினேட் செய்துவிட்டீர்கள், இதனால் இடையில் உங்களை யாரும் டுவிஸ்ட் செய்துவிட்டார்களா என்று கேட்டார்.

அதற்கு லாஸ்லியா நீங்கள் மதுமிதா(ஆம்பளைங்க யூஸ் பண்றாங்க) பிரச்சனையின் போது இடையில் குறுக்கிடவில்லை, சாதரணமாக சென்றீர்கள் அது எனக்கு தவறாக தோன்றியது, அதுமட்டுமின்றி சில விஷயங்களில் நீங்கள் பிரச்சனை நடந்தால் தலையிட மாட்டீங்கிறீங்க, அதுவே உங்களை நாமினேட் செய்ய காரணம் என்று கூறினார்.