பிக் பாஸ் சீசன் 3, 60 நாட்களை கடந்திருக்கும் நிலையில், முக்கிய போட்டியாளர்கள் சிலர் குறி வைக்கப்பட்டிருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவால் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட கஸ்தூரி, துண்டை காணோம், துணிய காணோம், என்ற ரீதியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டதால், மீதி இருக்கும் நாட்களில் எதை வைத்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கலாம், என்று யோசித்த பிக் பாஸ் டீம் கவின், லொஸ்லியா காதலை கையில் எடுத்திருக்கிறார்கள்.

ஆனால், கவின் மற்றும் லொஸ்லியாவின் காதல் லீலைகளை, அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் தர்ஷன், முகேன் மற்றும் சாண்டி ஆகியோராலேயே பொருத்துக்கொள்ள முடியாததால், கவினை வீட்டை விட்டு துரத்துவதில் முகேனும், தர்ஷனும் மும்முரம் காட்ட தொடங்கியுள்ளார்கள்.

அந்த வகையில், இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்றாலும், எலிமினேஷனுக்கான நாமினேட் நடந்தது. இதில், சேரன், தர்ஷன், முகேன் ஆகியோர் கவினை நாமினேட் செய்தார்கள். அவர்களுடன் மேலும் இருவரும் கவினை நாமினேட் செய்திருப்பதால், அடுத்த வாரம் கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதே சமயம், கவினுக்கு அடுத்தப்படியாக அதிகமான நாமினேட் பெற்றிருப்பவர் வனிதா. ஏற்கனவே ஒரு முறை சொந்த பிரச்சினைக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா, மீண்டும் வீட்டுக்குள் எண்ட்ரியாக அதிரடியாக இயங்கி வர, அவரது நடவடிக்கைகள் மக்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது. இதனால், ரசிகர்களின் வாக்குகள் அவருக்கு குறைவாகவே கிடைக்கும் என்பதால் அவரும் அடுத்த வாரம் வெளியேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது நடைபெற்றிருக்கும் எலிமினேஷனுக்கான நாமினேஷனில், கவின் – 5, வனிதா – 4, ஷெரின் – 3, முகேன் – 3 ஆகிய நான்கு பேரும் பெற்றிருக்கும் வாக்குகளை வைத்தும், ரசிகர்களின் வாக்குகளை வைத்தும் பார்த்தால், அநேகமாக அடுத்த வாரம் கவின் அல்லது வனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படலாம், ஆனால் ரசிகர்களின் வாக்கு எண்ணிக்கையில் அவ்வபோது மாற்றங்கள் ஏற்படும் என்பதால், இதிலும் திடீரென்று மாற்றம் ஏற்படலாம்.