பிக்பாஸ் வீட்டில் இன்று நான் டைட்டில் வின் பன்ன தகுதியானவன் என்று சேரன் பேசிய போது, இடையில் குறுக்கிட்ட கவீன், நீங்கள் இயக்குனராக காட்டவில்லை, ஆனால் ஒரு சில இடங்களில் இயக்குனராக நினைத்துள்ளீர்கள்.

அதுமட்டுமின்றி எங்களிடம் நீங்கள் அந்தளவிற்கு நெருக்கமாக பழகவில்லை என்று கேட்டார். அதற்கு சேரன், நான் இந்த வீட்டில் இருக்கும் அனைவரிடம் பேசி பழக வேண்டும் என்பது தான் ஆசை.

அதிலும் குறிப்பாக நீங்கள் மூன்று பேரும் சேர்ந்து பேசும் போதும், சிரிக்கும் போதும் நான் அங்கு இருக்க வேண்டும் என்று நினைப்பேன், ஆனால் நீங்கள் என்னை ஏதோ சண்டைக்காரன் போன்று ஒதுக்கியே வைத்தீர்கள்.

இதனால் என் மனசு எவ்வளவு வலித்தது என்பது எனக்கு தெரியும் என்று கொஞ்சம் கண்கலங்கினார். அதுமட்டுமின்றி கவீன் நீ ஒரு அசிஸ்டண்ட் டைரக்டர், ஒரு வார்த்தை நீ கூட ஏன் கிட்ட வந்து, இவ்ளோ படம் பண்ணீயிருக்கேங்க இது எல்லாம் எப்படி சார் என்று கேட்கவில்லையே.

அந்தளவிற்கு நான் ஆகாதா ஆளாக ஆகிவிட்டனே என்று வருத்தப்பட்டார்.