பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சாண்டி சக போட்டியாளர்களை கிண்டல் செய்யும் விதமாக சில செயல்களை செய்து வருகிறார்.

அந்த வகையில் ஸ்கூல் டாஸ்க் கொடுக்கப்பட்ட போது, அவர் கஸ்தூரியை சத்துணவு ஆயா என்று கூறினார். இதனால் கமல்ஹாசன் கடந்த வாரம் எபிசோடில் சத்துணவு ஆயா என்றால் அவ்வளவு சீப்பாக இருக்கா? அவர்கள் நம் ஜகன்மாதா என்று கூறினார்.

அதன் பின் சாண்டி சார் நான் அதை தெரியாமல் சொல்லிவிட்டேன், அப்புறம் தான் யோசித்தேன் இது தவறு என்று, நானும் அரசு பள்ளியில் படித்தவன், சத்துணவு திட்டம் பற்றி தெரியும், சாப்பிட்டுருக்கிறேன் என்றெல்லாம் கூறினார்.

ஆனால் இணையவாசிகளோ, சாண்டி அரசு பள்ளியில் படிக்கவில்லை, அவர் படித்த பள்ளி இது தான் , இதில் எப்படி சாத்தியம்? அவர் பொய் சொல்லுகிறார் என்று குறித்த பள்ளியின் புகைப்படத்தை வைரலாக்கி வந்தனர்.

ஆனால் உண்மையில் அது அரசு உதவி பெறும் பள்ளி எனவும், இங்கு சத்துணவு கொடுக்கப்பட்டது என்று அந்த பள்ளியில் படித்த நபர் அந்த புகைப்படத்திற்கு கீழே கமெண்ட் செய்துள்ளார்.

இதனால் சாண்டி பொய் சொல்லவில்லை என்பது தெரிகிறது, ஆனால் சிலரோ சாண்டி பொய் சொல்கிறார் என்று பரப்பி வருகின்றனர்.