பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்த நிலையில், நிகழ்ச்சியில் வனிதா திரும்ப வந்ததிலிருந்து சற்று சுவாரஷ்யம் கலந்த பிரச்சனைகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கஸ்தூரி கடந்த வாரம் வெளியேறியுள்ளார். அவருக்கு ரகசிய அறைக்கு செல்ல சலுகை அளித்தும் அவர் அதனை நிராகரித்துவிட்டார்.

இதனால், இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று கமல் அறிவித்திருந்தார். இருப்பினும் அது போட்டியாளர்களுக்கு தெரியாது என்பதால் நேற்று வாரத்தின் முதல் நாள் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதில், ஷெரின், முகென், கவின், வனிதா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

இந்நிலையில், போட்டியாளர்கள், நான் வெற்றிபெற எனக்கு தகுதி உண்டு என்பது குறித்து பேசி வரும் நிலையில், இன்று ;லோஸ்லியா பேசியுள்ளார்.

அப்போது, தர்ஷன் லோஸ்லியாவை கேள்விகளால் வசைபாடியுள்ளார்.