அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த விஜய் அம்மா… என்ன சொல்லியிருக்காங்க பாருங்க

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் தான் நேர்கொண்ட பார்வை.

பெண்களுக்கு ஆண்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை ஒரு வழக்கறிஞராக அஜித் அற்புதமாக நடித்திருப்பார்.

ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் என்றாலும், கூட மக்களுக்கு சலிப்பு தட்டாத வகையில் இயக்குனர் வினோத் படத்தை எடுத்திருக்கும் விதத்திற்கே பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தளபதி விஜயின் அப்பா சந்திரசேகர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்தார். அவரிடம் அஜித், விஜய் பற்றி கேட்ட போது, பல தகவல்களை கூறினார்.

அப்போது அஜித்தும், விஜயும் நல்ல நண்பர்கள், இருவருமே அவ்வப்போது அவர்களின் வீட்டிற்கு சென்று வருவார்கள்.

ராஜாவின் பார்வை பட ஷுட்டிங்கின் போது, என் மனைவி ஷோபானா அஜித்திற்கு சாப்பாடு எல்லாம் கொடுத்திருக்கிறார். அந்தளவிற்கு ஒற்றுமையாக நாங்கள் இருக்கிறோம்.

அதுமட்டுமின்றி அஜித் படம் ரிலிஸ் ஆகிவிட்டால், அதில் முதல் நாளே அவள் அந்த படத்தை போய் பார்த்துவிடுவாள், அந்த வகையில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்துவிட்டு வந்து பாராட்டினாள்.

அதன் பின்பு தான் நான் படத்தை பார்த்தேன், அஜித் தன்னுடைய இமேஜை எல்லாம் விட்டு, இப்படி ஒரு படத்தில் நடித்திருப்பது உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம் தான், ஒவ்வொரு நடிகரும் இது போன்று ஒரு படமாவது நிச்சயம் பண்ண வேண்டும் என்று கூறினார்.