கவீனிடம் தேவையில்லாத கேள்விகளை கேட்ட வனிதா… கோபப்பட்ட லாஸ்லியா

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இன்று சரியான டாஸ்க் ஒன்றை கொடுத்தார், அதாவது இப்போது இருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் நான் தான் இந்த டைட்டில் வின் பண்ண சரியான ஆள் என்பதை நிரூபிக்க வேண்டும்.

அப்படி அந்த நபர் கூறும் போது, மற்ற போட்டியாளர்கள் அவரிடம் உனக்கு என்ன தகுதி எல்லாம் இருக்கு என்பது போல் கேள்விகளை எழுப்பலாம், இறுதியில் இதில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்கள் அடுத்த வார தலைவராக நேரடியாக தேர்வு செய்யப்படுவார் என்று கூறினார்.

அந்த வகையில், கவீன் நான் இந்த பிக்பாஸ் வீட்டில் டாஸ்க்குகள் எல்லாவற்றையும் செய்துள்ளேன், அதுமட்டுமின்றி எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதில் இடையில் குறுக்கிட்டுள்ளேன்.

நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளேன் என்று கூறினார்.

அப்போது இடையில் குறுக்கிட்ட வனிதா, நீ நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்று கூறுகிறாய், ஆனால் ஷாக்சியும் உன்னுடைய நட்பாகத்தானே இருந்தார் அப்புறம் ஏன் அவரிடம் பேசுவதை நிறுத்தினாய் என்றார்.

கவீன் உடனே, அவர் என்னை வைத்து கேம் விளையாடுகிறார் என்பதை அறிந்தேன் அதன் காரணமாகவே அவரிடம் இருந்து விலகினேன் என்று கூற, சாண்டியாக இருந்தாலும் இப்படித் தான் இருப்பாயா என்று போது கவீன் ஆம் என்று கூறினார்.

அதன் பின் தேவையில்லாமல் ஷாக்சி இருக்கும் போது லாஸ்லியாவுடன் பேசினாய், இப்போது உங்கள் இருவருக்கும் இருப்பது நட்பா இல்லை என்ன? அதை சொல்? இப்போதே சொல் என்றார்.

அதற்கு கவீன் அதை நாங்கள் முடிவு செய்யவில்லை, வெளியில் போய் பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டோம் என்றார், ஆனால் வனிதா மீண்டும்..மீண்டும் லாஸ்லியாவை பற்றி கேட்டுக் கொண்டே இருந்ததால், லாஸ்லியா தேவையில்லாத கேள்வி எல்லாம் கேட்காதீங்க என்று கோபப்பட்டார்.