ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது… இதோ அழகான ஜோடியின் புகைப்படக்

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில், ஜீதமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் மக்களால் அதிகம் விரும்பப்படும் சீரியல்.

சமீபகாலமாக இந்த சீரியல் தான் டி.ஆர்.பியிலும் பட்டையை கிளப்பி வருகிறது. இருப்பினும் கடந்த சில வாரங்களாக பிக்பாஸ் ஒளிபரப்பப்பட்டு வருவதால், இந்த சீரியல் டி.ஆர்.பியில் அடி வாங்கி வருகிறது.

அதுமட்டுமின்றி ஒரே அரைத்த மாவை அரைப்பது போன்றே காதல், மோதல், மீண்டும் காதல், ரோமான்ஸ் என்று காட்டுவதால், மக்களுக்கும் இது பிடிக்காமல் போய்விட்டது.

இந்நிலையில் இந்த சீரியலில் வனஜாவின் மருமகளாக நடித்து வரும் ஜெனிபருக்கு நேற்று தான் திருமணம் முடிந்தது. இவர் தன் சொந்த மாமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒவ்வொரு பெண்ணிற்கும் நல்ல பையனை திருமணம் செய்ய வேண்டும் என்ற கனவு இருகும், அந்த வகையில் எனக்கு அந்த கனவு நிறைவேறிவிட்டது என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த அழகான ஜோடியின் புகைப்படம்….

 

View this post on Instagram

 

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சியக்கப்படுவதாக சொல்லி கேட்டிருக்கிறேன்…இன்று ஜெனிஃபரின் அழகிய சிரிப்பில் அந்த சொர்கத்தின் வனப்பை கண்டேன்……சரவணன் ஜெனிஃபர் இன்று தொடங்கியிருக்கும் உங்கள் இந்த அழகிய இல்லற பயணத்தில் நிறைய மகிழ்ச்சிகளும் நிறைவான அமைதியான தருணங்களும் குறைவில்லா செல்வமும் நிறைந்திருக்கும்💐💐❤️❤️ Jenny Saro you both are looking so so so beautiful Darlings😘😘luv u both❤️god bless 💐💐

A post shared by Laxmi (@laxarthy) on