பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்களில் ஒருவராக சென்றவர் தான் நடிகை ரேஷ்மா. அதன் பின் சில வாரங்களில் வெளியேற்றப்பட்ட இவர், தற்போது அஜித்தின் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ள சந்தோஷத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு பேட்டியின் போது, பிக்பாஸ் பற்றி கேட்டால், அதில் சாண்டியைப் பற்றி சொல்லாமல் இருக்கமாட்டார்.

அந்த வகையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனக்கு மிகவும் பிடித்த போட்டியாளர் சாண்டி, இவர் தான் டைட்டில் வின் பண்ண வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

அதே போன்று நான் வீட்டில் பார்த்தவர்களில் தர்ஷன், முகின், ஷெரினும் அப்படிப்பட்டவர்கள் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.