கவீனை ஏமாற்றி அப்பட்டமாக பொய் சொன்னாரா லாஸ்லியா? வைரலாகும் ஆதார புகைப்படம்

பிக்பாஸ் வீட்டில் அதிகமாக நெருக்கமாக இருக்கும் போட்டியாளர்கள் யார் என்றால் அது கவீன்-லாஸ்லியா தான், அந்தளவிற்கு இருவரும் நள்ளிரவு நேரம் என்று கூட பார்க்காமல் பேசிக் கொண்டே இருப்பர்.

அந்தளவிற்கு இவர்களின் நட்பு இருக்கிறது. ஒரு சிலர் இது நட்பையும் தாண்டி என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்திய எபிசோடின் போது, கவீன், லாஸ்லியாவிடம் நீ பிறந்தநாளை எப்படி கொண்டாடுவாய் என்று கேட்டார், அதற்கு லாஸ்லியா எனக்கு கேக்கே வெட்டியது கிடையாது. ஆசையா இருக்கும்.

இருப்பினும் அதை நான் வெளியில் சொல்லிக் கொள்ளமாட்டேன், ஆனால் என் தங்கையின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டும் போது பார்க்க ஆசையாக இருக்கும் என்று கூறுவர்.

இதையடுத்து தற்போது லாஸ்லியா தன்னுடைய 21 வயதில் குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனால் அவர் கவீனை ஏமாற்றுவதற்காக அப்படி சொன்னாரா? இல்லை இது குடும்பத்தினருடன் இல்லாமல், வேறு எங்கும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடப்பட்டதா? என்பது தெரியவில்லை.

இதை வெளியில் வந்த பின்பு லாஸ்லியா கூறினால் மட்டுமே தெரியும்.