பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் இல்லை என்றாலும் போட்டியாளர்களுக்கு இந்த விஷயம் தெரியாததால், அவர்கள் இந்த வீட்டிற்கு செட்டாகதாவர்களை நாமினேட் செய்தனர்.

அந்த வகையில் தர்ஷன், முகன், சேரன், வனிதா, ஷெரீன் போன்றோர் சொல்லி வைத்தது போன்று, கவீன் மைக்கை ஆப் செய்து லாஸ்லியாவிடம் பேசியது தவறு, இதன் காரணமாக அவரை நாமினேட் செய்கிறோம் என்று கூறினர்.

இதையடுத்து இந்த வார நாமினேஷனில் கவீன், ஷெரீன் ஆகியோர் இருப்பதாக பிக்பாஸ் அவர்களிடம் கூறினார்.

அதன் பின் கவீன், லாஸ்லியா பேசிக் கொண்டிருந்த போது, லாஸ்லியா கவீனிடம் நீ நாமினேட் ஆனதற்கு நான் தான் காரணம், மன்னித்துவிடு என்று கூற, உடனே கவீன் நான் கேம் விளையாட ஆரம்பித்துவிட்டேன் இனி தான் ஆட்டம் இருக்கு, நான் இல்லாமல் 30 நாட்கள் ஜாலியாக விளையாடுங்கள் என்று கூறினார்.

அப்போது லாஸ்லியா நீ எப்போதும் போல் சண்டை போடு, ஜாலியா இரு என்று கூறினார். ஆனால் கவீனோ அது எல்லாம் நான் செய்தால், உங்கள் மைண்ட் விளையாட்டில் இருக்காது, அதனால் நான் இதை எல்லாம் வெளியில் வந்து பேசிக் கொள்ளலாம் என்று கூறி கவீன் கூறி முடித்தார்.