பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷனில் தர்ஷன், முகன், சேரன் ஆகியோர் கவீனை நாமினேட் செய்தனர்.

இந்த வாரம் எலிமினேட் இல்லை என்றாலும், போட்டியாளர்கள் யாரை நாமினேட் செய்கின்றனர் என்பதை அறிவதற்காக, போட்டியை சுவாரஸ்யபடுத்துவதற்காக பிக்பாஸ் இப்படி ஒரு பக்கா பிளானை போட்டுள்ளார்.

இந்நிலையில் சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல் பசுபதி, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கவீனை சாண்டி ஆர்மி காப்பாற்றுவர்கள், நன்றி கடன் அடைக்க அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூகவலைத்தளங்களில் சாண்டிக்கு அதிக ஆதரவு உள்ளது, அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் சாண்டி-கவீன் இருவருமே உயிர்நண்பர்களாக பழகி வருகின்றனர், அதை மனதில் வைத்தே காஜல் இப்படி ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.

இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்றாலும், அடுத்த வாரம் கவீனை நாமினேட் செய்தால், காஜல் சொன்னது சரியாகத்தானே இருக்கும். சாண்டி ஆர்மி கவீனுக்கு ஓட்டு போட ரெடியா..?