பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று கஸ்தூரி வெளியேற்றப்பட்டார். வீட்டிற்குள் நுழைந்த வேகத்திலே கஸ்தூரி வெளியேறியதால், போட்டியாளர்கள் யாரும் அந்தளவிற்கு கண்கலங்கவில்லை, வருத்தப்படவில்லை.

இருப்பினும் கஸ்தூரி வெளியே வந்து கமலிடம் நின்று போட்டியாளர்களிடம் பேசிய போது, நான் இருந்தது குறைந்த நாட்கள் தான், ஆனால் உங்களை நிறையாவே மிஸ் செய்கிறேன் என்று கூறினார்.

அப்படி போட்டியாளர்கள் ஒவ்வொருவர் பற்றியும் கஸ்தூரி கூறிக் கொண்டிருந்த போது, கடைசியாக முகனைப் பற்றி கூறினார்.

நான் ஏன் முகனை கடைசியாக கூறினேன் என்றால், அவர் தான் பிக்பாஸ் வீட்டில் எந்த ஒரு நடிப்பும், ஒரு யுக்தி, கேமரா இருக்கிறது என்பதை எல்லாம் நினைக்காமல், தன்னுடைய அன்றாட வேலையை செய்கிறார்.

அவருக்கு ஒரு சுத்தமான மனசு தான் என்று சொல்ல வேண்டும், இந்த போட்டியில் அவர் ஜெயிக்கிறாரோ? இல்லையோ? ஆனால் வாழ்க்கைக்கு இப்படி இருந்தால் தான் முகின் ஜெயிக்க முடியும் என்று கஸ்தூரி அவரிடம் கூறினார்.

அதுமட்டுமின்றி என்னுடைய செல்லப் பிள்ளை முகின் தான் என்று கூறினார். அப்போது அரங்கத்தில் விசில் மற்றும் கைதட்டல் பறந்தது.