சேரன், லாஸ்லியாவுக்காக Title-ஐ விட்டுக் கொடுக்க சொல்றார்…ஷெரீனிடம் கண்ணீர் வடித்த தர்ஷன்

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடம் நேற்று கமல் நீங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக போட்டியை விளையாடுங்கள், பாசம், காதல் எல்லாம் தூக்கி வைத்துவிடுங்கள் என்று கூறினார்.

இதையடுத்து இன்று ஷெரீன், தர்ஷன் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இந்த வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் எனக்கு விட்டுக் கொடுப்பது போல் இருப்பது கில்ட்டியாக இருக்கிறது.

நான் விளையாடி ஜெயிக்க வேண்டும், அப்படித்தான் அன்று சேரன் நான் வீட்டை விட்டு வெளியேறினாலும், நீ லாஸ்லியாவுக்கு ஏதாவது விட்டுக் கொடுடா என்று சொல்றார்.

இது போட்டி, நான் எப்படி முடிவு பண்ண முடியும், இது எல்லாம் மக்கள் கையில் தான் இருக்கிறது என்று கூறினார்.

அப்போது ஷெரீன் சேரன், நல்ல கேம் விளையாடுகிறார், நீ அதை எல்லாம் குழப்பிக் கொள்ளாதே நீ உன் கேமை விளையாடு என்று கூறினார்.