பிக்பாஸில் ஒவ்வொருவாரத்தின் திங்கட் கிழமை போட்டியாளர்கள், யாரை வெளியேற்ற வேண்டும் என்று நாமினேட் செய்வார்கள்.

அந்த வகையில் இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று கமல் நேற்றே சொல்லிவிட்டார். இருப்பினும் இது உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு தெரியாது என்பதால், அவர்கள் வழக்கம் போல் நாமினேட் செய்யட்டும் என்று கூறினார்.

 

அதன் படி இன்று வெளியாகியுள்ள புரமோ வீடியோவில், முகன், தர்ஷன், சேரன் ஆகியோ கவினை நாமினேட் செய்துள்ளனர்.

ஏற்கனவே வனிதாவிற்கு கவீனை பிடிக்காது என்பதால், அவரும் கவீனை தான் நாமினேட் செய்திருப்பார், இதனால் பிக்பாஸ் வீட்டில் அனைவரும் கவீனை வெளியேற்ற முடிவு செய்துவிட்டனர் என்பது இதில் இருந்து தெளிவாக தெரிகிறது.